shivani narayanan act with vadivelus naai sekar return movie

கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர்சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான 'தலைநகரம்' படத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரமும், அவர் பேசும் நகைச்சுவை வசனங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.இதனைத்தொடர்ந்து இயக்குநர் சுராஜ் நடிகர் வடிவேலுவை வைத்து 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். ரெடின்கிங்ஸ்லி, சிவாங்கி, ஆனந்தராஜ்உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் நாய் சேகர் படத்தில் பிக் பாஸ் புகழ் ஷிவானி கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல்வெளியாகியுள்ளது. இப்படத்தில் முன்னதாக பிரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமான நிலையில் கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக பிரியா பவானி சங்கருக்கு பதிலாகஷிவானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.நடிகை ஷிவானி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்திலும், பொன்ராம் இயக்கும் விஜய் சேதுபதி படத்திலும்நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment