Advertisment

ரஜினி படத்தில் இணைந்த பிரபல நடிகர் - புகைப்படத்துடன் உறுதி செய்த படக்குழு

Shiva Rajkumar join the sets of rajini in jailer

'அண்ணாத்த' படத்தைத்தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் இப்படத்தில் ஜெயிலர் ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

முன்னதாக கன்னட நடிகர் சிவராஜ் குமார் 'ஜெயிலர்' படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், ஒரு பேட்டியில் தான் ரஜினியுடன் நடிப்பதாகவும் அவரேதெரிவித்திருந்தார். ஆனால் படக்குழு தரப்பிடமிருந்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

Advertisment

இந்நிலையில் புகழ் பெற்ற கன்னட நடிகர் சிவராஜ் குமார் 'ஜெயிலர்' படத்தில் நடிப்பதைப் படக்குழு உறுதி செய்துள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிவராஜ் குமார் கலந்துகொண்டுள்ளதாகத்தெரிவித்து ஒரு புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் கன்னடமொழிகளில் புகழ் பெற்ற இரண்டு மெகா ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தைத்தொடர்ந்து ரஜினி லைகா நிறுவனம் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். இதில் ஒன்றாக ஐஸ்வர்யா இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe