“சாரி நண்பா, அது என்னுடைய தவறுதான்...” விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்

Shine Tom Chacko apologizes vijay fans beast comment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ தீவிரவாதிகளில் ஒருவராக நடித்திருப்பார்.

அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ, “பீஸ்ட் படத்தின் காட்சிகள் லாஜிக் இல்லை. ஒருவர் பொதுவாக அதிகமான எடையைக் கையில் தூக்கினால் முகத்தில் கஷ்டம் தெரியும். ஆனால் அப்படி எந்தவிதமான முக பாவனைகளும் விஜய் முகத்தில் தெரியவில்லை. தீவிரவாதியை விஜய் கையில் சூட்கேஸாக தூக்கி வரும் காட்சிகள் லாஜிக்கே இல்லாதவை” என்று கூறியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள், ஷைன் டாம் சாக்கோவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ விஜய் ரசிகர்களிடையே மன்னிப்பு கேட்டதாக ஒரு பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், "நான் ஊடகத்தின் வாயிலாக தெரிவித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அது என்னுடைய தவறுதான். சார் நண்பா" என்று குறிப்பிட்டுள்ளார்.

actor vijay Beast
இதையும் படியுங்கள்
Subscribe