“சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி” - ஷில்பா ஷெட்டி

393

கே.வி.என். புரொடைக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பிரேம் இயக்கத்தில், துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேடி தி டெவில்’( KD The Devil ). பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பதிப்பின் டீசரை அறிமுகப்படுத்தும் வகையிலும், சென்னையில் பத்திரிக்கையாளரை சந்தித்தனர். இந்நிகழ்வினில் பத்திரிக்கையாளர்களுக்குப் படத்தின் டீசரைத்  திரையிட்டுக்காட்டினர். பின்னர் அவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். 

இந்நிகழ்வினில் ஷில்பா ஷெட்டி பகிர்ந்து கொண்டதாவது, “சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. உங்களைப் பார்க்க சந்தோசமாக உள்ளது. மிஸ்டர் ரோமியோ ஷூட்டிங் போது தமிழ் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். கேடி படம் பொறுத்தவரை சூப்பரான எமோசன் இருக்கிறது, சூப்பரான ஸ்டார்ஸ், சூப்பர் இயக்குநர் இருக்கிறார்கள், நிறைய உழைத்திருக்கிறோம். படத்தைக் கண்டிப்பாகத் தமிழ் ரசிகர்களும் ரசிப்பார்கள், இது அழகான மாஸ் ஆக்சன் படம். எல்லோரும் பாருங்கள் நன்றி” என்றார்.  

துருவ் சர்ஜா பகிர்ந்துகொண்டதாவது, “இது என் 6 வது படம், டீசர் எல்லோருக்கும் பிடித்திருக்குமென நம்புகிறேன். இந்தப்படத்தில் சான்ஸ் தந்த பிரேம் சார், தயாரிப்பாளர் சுப்ரீத், வெங்கட் சாருக்கு நன்றி. எங்கள் குடும்பத்துக்கே ஃபேவரைட்டான சஞ்சய் தத் சார் இந்தப்படத்தில் நடித்ததற்கு நன்றி. ரவிச்சந்திரன் சார், ரமேஷ் அரவிந்த் சார் நடித்துள்ளார்கள். ஷில்பா ஷெட்டி மேடம் இன்னும் அப்படியே இளமையாக உள்ளார். அட்டகாசமாக நடித்துள்ளார்” என்றார். 

shilpa shetty
இதையும் படியுங்கள்
Subscribe