Shilpa Shetty joins the shooting of  KD The Devil movie

நடிகர் துருவா சர்ஜாவின் நடிப்பில்பான்இந்தியா படமாக உருவாகும் படம் ‘கேடி - தி டெவில்’. 1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. கேவிஎன் ப்ரொடக்‌ஷன் வழங்கும் இப்படத்தை இயக்குநர் பிரேம் இயக்குகிறார். இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

Advertisment

இந்தநிலையில் இப்படத்தில் துருவா சர்ஜாவுடன்ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா கூறுகையில், "ராஜ்யங்களுக்கு இடையே நடக்கும் ஒரு மாபெரும் போரை பற்றிய கதை தான் கேடி தி டெவில், ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் ஒரு ‘சத்யவதி’ தேவை. இந்த 'கேடி' போர்க்களத்தில் நானும் ஒரு அதிசக்தி வாய்ந்த கதாப்பாத்திரத்தில் சத்தியவதியாக நடிப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி" என்றார்.

Advertisment