/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/147_17.jpg)
இந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் ஷில்பா ஷெட்டி தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது இந்தியில் 'நிகம்மா' படத்தைத்தொடர்ந்து 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். ரோஹித் ஷெட்டி மற்றும் சுஷ்வந்த் பிரகாஷ் இயக்கிவரும் இந்த சீரிஸில் சித்தார்த் மல்ஹோத்ரா, விவேக் ஓபராய், ஈஷா தல்வார் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்த சீரிஸ் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ஷில்பா ஷெட்டி புகைப்படக் கலைஞர்களைத்திட்டிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஷில்பா ஷெட்டியைப்பார்த்த புகைப்படக் கலைஞர்கள், அவரைச் சூழ்ந்து கொண்டுபுகைப்படம் எடுக்கின்றனர். அவர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு காரில் ஏற முயல்கிறார் ஷில்பா ஷெட்டி. அப்போதும் அவரைப் பின்தொடர்ந்து ஒருவர் புகைப்படம் எடுக்க, உடனே கடுப்பான ஷில்பா ஷெட்டி “அடேய் விடுங்கடா...” என்ற தொனியில் கடுமையான வார்த்தைகளால் பேசுகிறார்.
முன்னதாக திரைப் பிரபலங்கள் பலருக்கும் இதுபோன்று நடந்துள்ளது. அவரைப் புகைப்படக் கலைஞர்கள் பின் தொடர்ந்து புகைப்படம் எடுப்பதும், உடனே பிரபலங்கள் கடுப்பாகி அவர்களைக் கடுமையாக விமர்சிப்பதும் வழக்கமாக நடந்து வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)