ஹிந்தி பட உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஷில்பா ஷெட்டி கடைசியாக ‘அப்னே’ ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு இத்தனை ஆண்டுகள் ஒதுங்கியிருந்த அவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். ஹிந்தியில் தயாராகும் ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்கவுள்ள அவரை உடல் எடையை குறைக்கும் ஆயுர்வேத மருந்து விளம்பர படத்தில் நடிக்கவும் அணுகியுள்ளனர். இதல் நடிக்க அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசபட்டது. ஆனால் ஷில்பாவோ அதில் நடிக்க மறுத்து விட்டார். மேலும் இது குறித்து அவர் விளக்கமளித்து பேசியபோது... ''எனக்கு நம்பிக்கை இல்லாத விஷயங்களில் நான் நடிக்க விரும்ப மாட்டேன். மாத்திரைகள் தற்காலிக தீர்வுதான். சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியால் மட்டுமே நோயில் இருந்து விடுபட முடியும்'' என்றார்.
''நோய் குணமாக இந்த வழியை பின்பற்றக்கூடாது'' - ஷில்பா ஷெட்டி அறிவுரை
Advertisment