Advertisment

காரில் அத்துமீறி ஏறிய வாலிபர்; பிரபல நடிகை அதிர்ச்சி

shilpa shetty car incident mumbai

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஷில்பா ஷெட்டி தமிழில் பிரபுதேவாவின் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்திருந்தார். இதனைதொடர்ந்து குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். இதையடுத்து தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியாகநடித்து வந்த ஷில்பா ஷெட்டி கடந்த 2009 ஆம் ஆண்டுதொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ஷமிஷாஎன்ற மகள் உள்ளார்.

Advertisment

இந்நிலையில் ஷில்பா ஷெட்டியின் காரில் வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார். நடிகை ஸ்மிருதி கண்ணாவின் மகள்பிறந்தநாள் விழாவில் பங்கேற்க ஷில்பா ஷெட்டி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு காரில் வந்துள்ளார். அதன் பின் விழாவை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்புவதற்காககாரில் ஏறி ஷில்பா ஷெட்டிஉட்கார்ந்தார். அப்போது வாலிபர் ஒருவர் ஷில்பா ஷெட்டியின் காரில் அத்துமீறி ஏறி உட்கார்ந்துகொண்டார். இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த ஷில்பா ஷெட்டி வாலிபரை கீழே இறங்குமாறு கூச்சலிட்டார். ஷில்பா ஷெட்டியின் சத்தத்தை கேட்டு ஓடி வந்த பாதுகாவலர்கள்அந்த காரில் இருந்து வாலிபரை வெளியேற்றினர். அதன் பின்பு பாதுகாப்பாக ஷில்பா ஷெட்டி அவரது காரில் அனுப்பி வைக்கப்பட்டார். ஷில்பா ஷெட்டியிடன்புகைப்படம் எடுப்பதற்காத்தான் காரில் எறியதாகஅந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.

Advertisment

Bollywood shilpa shetty
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe