Advertisment

“தமிழ்நாட்டில் திறமைசாலிகளுக்கு வாய்ப்பளிக்கிறார்கள்” - ஷில்பா மஞ்சுநாத்

296

அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் சின்னத்தம்பி புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சென்னை ஃபைல்ஸ்’. இப்படத்தில் வெற்றி,  ஷில்பா மஞ்சுநாத் தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார். ஆகஸ்ட் 1ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் ஆகியோர் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர். 

Advertisment

இந்நிகழ்வில் ஷில்பா மஞ்சுநாத் பேசுகையில்,  “தொடர்ந்து வாய்ப்பளிக்கும் தமிழ் திரையுலகத்திற்கு நன்றி. தமிழில் அறிமுகமாகும் போது தமிழ் தெரியாது. நடிப்பும் தெரியாது. இருந்தாலும் தமிழ்நாட்டில் தான் திறமைசாலிகளை கண்டறிந்து, வாய்ப்பளித்து அவர்களை பாராட்டுகிறார்கள். தொடர்ந்து ஆதரவும் தருகிறார்கள். 'காளி', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்', 'சிங்க பெண்ணே' என தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறேன்.

Advertisment

நிறைய படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் பத்திரிகையாளராக நடித்திருக்கிறேன். இதற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

shilpa manjunath
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe