ngjgdmd

Advertisment

'சதுரங்க வேட்டை' புகழ் நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தைப் புதுமுக இயக்குநர் ஹாரூன் இயக்குகிறார். 'வேலன் புரொடக்சன்ஸ்' சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் 'ப்ரொடக்சன் நம்பர் 1' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இப்படத்தில் 'காளி', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் நாயகியாக நடிக்கிறார்.

படத்தின் முக்கிய வேடங்களில் 'பிளாக் ஷீப்' நந்தினி, பாரதா நாயுடு, ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். கலை இயக்குநர் பொறுப்பை அருண் ஏற்க, நடன இயக்குநராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார்.