Advertisment

கிரிக்கெட்டை தொடர்ந்து சினிமா - மகத்துடன் நடிக்கும் ஷிகர் தவான்

Shikhar Dhawan make a debut in bollywood movie double xl

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தற்போது இந்தியா, தென்ஆப்பிரிக்கா இடையே நடந்த டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இதில் ஒரு நாள் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்று வழிநடத்தி கோப்பையை பெற்று கொடுத்தார் ஷிகர் தவான்.

Advertisment

இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டை தாண்டி தற்போது திரையுலகிலும் காலடி வைத்துள்ளார் ஷிகர் தவான். பாலிவுட்டில் ஹுமா குரேஷி, சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'டபுள் எக்ஸ்எல்' (Double XL) படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சத்ராம் ரமனி இயக்கியுள்ள இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்போது ஹுமா குரேஷியுடன் தவான் இடம்பெற்றுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பாக கிரிக்கெட்டில் ஜொலித்த ஷிகர் தவான் திரையுலகிலும் வெற்றி பெற ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இது தொடர்பாக ஷிகர் தவான், "தேசத்திற்காக விளையாடும் ஒரு விளையாட்டு வீரராக, வாழ்க்கை எப்போதும் மிகவும் பரபரப்பாக இருக்கும். நல்ல பொழுதுபோக்குப் படங்களைப் பார்ப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று. இந்த வாய்ப்பு எனக்கு வந்ததும் கதையைக் கேட்டதும் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படம் இந்த சமுதாயத்திற்கு ஒரு அழகான செய்தியை சொல்லும். பல இளம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தங்கள் கனவுகளை நோக்கி ஓட இப்படம் ஒரு உத்வேகமாக இருக்கும் என நம்புகிறேன்" என பேசினார்.

இப்படத்தை பூஷன் குமார், கிரிஷன் குமார் உள்ளிட்ட 8 பேர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஜாகீர் இக்பால் மற்றும் தமிழில் மங்காத்தா, ஜில்லா படத்தில் நடித்து பிரபலமான மஹத் ராகவேந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

huma qureshi mahat raghavendra Shikar Dhawan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe