Advertisment

'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்!

gewgea

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரித்து விக்ரம் நயன்தாரா நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது 'இருமுகன்' படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இதற்கிடையே பிரபல ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ்ஸில் வெளியான ஜேமிஃபாக்ஸ்ஸின் 'ப்ரொஜெக்ட் பவர்' என்ற படம் இருமுகன் படத்தின் தழுவல், ரீமேக் என சமூகவலைதளங்களில் சமீபத்தில் தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து இப்பட தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில்...

Advertisment

''தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிப்பில், ஆனந்த் ஷங்கர் இயக்கிய சியான் விக்ரமின் இருமுகன் படத்தின் எந்தவொரு உலகளாவிய / பிராந்திய மொழிகளுக்கும் ரீமேக் உரிமைகளை நாங்கள் விற்கவில்லை. இது சமூக ஊடக குழப்பங்களையும், ஜேமிஃபாக்ஸ்ஸின் ப்ரொஜெக்ட் பவர் படத்துடன் கொண்ட ஒப்பீடுகளையும் அழிக்கும் என்று நம்புகிறேன்'' என விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

actor vikram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe