Advertisment

பிரபல நடிகர் மீது பாலியல் புகார் கூறிய பாலிவுட் நடிகை!

vdgasd

Advertisment

‘ஹவுஸ்ஃபுல்’, ‘ஹவுஸ்ஃபுல் 2’ உள்ளிட்டபாலிவுட் படங்களின் இயக்குனரும், நடிகருமான சாஜித்கான் மீது பிரபல கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா பாலியல் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் 2005ஆம் ஆண்டு சாஜித்கானை சந்தித்தேன். அப்போது என்னிடம் ஆபாசமாக நடந்துகொண்டார். நான் இதற்காக இங்கு வரவில்லை என்று அவரிடம் தெரிவித்தேன்.

இந்தப் பாலியல் குற்றச்சாட்டை அப்போது சொல்லி இருந்தால், அவருக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர்கள் பேசியிருப்பார்கள். ஹிந்தி திரையுலக மாஃபியா வலிமையானது. நான் சாஜித் மீது பழி சுமத்தவில்லை. நடந்த உண்மையைக் கூறுகிறேன். என் தந்தை இறந்த துக்கத்தில் இருந்தபோது படம் குறித்து பேசுவதாக என்னை சாஜித்கான் அழைத்து தவறாக நடந்துகொண்டார். நான் மறுத்தும்பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்தார்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார் ஹிந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏற்கனவே சாஜித்கான் மீது நடிகைகள் ராச்சல், டிம்பிள் பாவ்லா, உதவி இயக்குனர் சலோனி சோப்ரா உள்ளிட்ட பலர் பாலியல் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

me too sherlyn chopra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe