Advertisment

“என்னை போல லவ்வர்பாய் ஆக முடியாது” -ரசிகர்களுக்கு ஷாரூக் நன்றி!

sharuk khan

உலகம் முழுவதும் தனது நடிப்பால் பலரையும் கவர்ந்துள்ள பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படுகிற ஷாரூக் கானின் 55வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. வருடா வருடம் தனது பிறந்தநாள் அன்று வீட்டு வாசலில் தன்னைப் பார்க்க கூடியிருக்கும் ரசிகர்களை பார்த்து கையசைப்பார். இந்தமுறை கரோனா அச்சுறுத்தல் என்பதால் ஷாரூக் கான் தனது ரசிகர்களிடம் அப்படி வீட்டு வாசலில் கூட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

Advertisment

ஆனாலும், அவருடைய வெறித்தனமான ரசிகர்கள், சமூக வலைதளத்தில் பிறந்தநாளை ட்ரெண்ட் செய்து கொண்டாடினர். இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷாரூக்.

Advertisment

அதில், “என்னுடைய பிறந்தநாளுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. என் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதையும் தாண்டி சில ரசிகர்கள் இந்த தருணத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதை நான் அறிவேன். மருத்துவர்களுக்கான கவச ஆடைகள், ரத்த தான முகாம்கள், உள்ளிட்ட ஏராளமான உதவிகளை செய்து வருகிறீர்கள். இதுதான் நாம் செய்வதிலேயே சிறந்த செயலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அன்பை பரப்பாமல் என்னை போல லவ்வர்பாய் ஆக முடியாது. எனவே அன்பை பரப்பும் உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

sharukh khan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe