bdgds

Advertisment

விஜய்யின் ‘தமிழன்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இசையமைப்பாளர் டி.இமான், தற்போதுதமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் நேற்று தனது (24.01.2021) 37வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்குப் பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பாடகி ஷாஷா திருப்பதி இமானுக்கு 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் இடம்பெற்ற 'உன் கூடவே பிறக்கணும், உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே' என்ற பாடலைப் பாடி, கூடவே அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.