/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/60_68.jpg)
தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தவர் சர்வானந்த். தமிழில் 'எங்கேயும் எப்போதும்' படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'கணம்' படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான நிலையில் நல்ல வரவேற்பு பெற்றது. இவருக்குகடந்த மே மாதம் அவரது காதலி ரக்ஷிதா ரெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் வருகிற ஜூன் 3 ஆம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடக்க திட்டமிட்டிருந்தது.
இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் நகரில் அவர் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. காரைசர்வானந்த் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. திருமணத்துக்கு சொற்ப நாட்களே இருந்த நிலையில் இந்த செய்தி சர்வானந்த் குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் கார் விபத்து குறித்து விளக்கமளித்துள்ளார் சர்வானந்த். அவர் கூறுகையில், "எனது கார் விபத்து மிகவும் சிறிய சம்பவம். உங்கள் அனைவரின் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் நான் வீட்டில் முற்றிலும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். கவலைப்பட ஒன்றுமில்லை. உங்கள் அக்கறைக்கு அனைவருக்கும் நன்றி" என்றுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)