Advertisment

"விதி மேல நம்பிக்கை இல்லை" ; டைம் ட்ராவலில் சென்டிமென்ட் பேசும் 'கணம்'

Sharwa, Ritu Varma, Amala Akkineni starring kanam movie trailer released

'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கணம்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் சர்வானந்த கதாநாயகனாக நடிக்க அவருக்கு அம்மாவாக நடிகை அமலா நடித்துள்ளார். 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக ரீத்து வர்மா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது. இப்பாடலை கார்த்தி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்நிலையில் 'கணம்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை பார்க்கையில் டைம் ட்ராவல் பின்னணியில் அம்மா மகன் சென்டிமென்ட்டை எமோஷனல் கலந்து சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் வருகிற 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

trailer.
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe