Advertisment

ஷாருக்கானின் 'ஜவான்' - புது ரிலீஸ் தேதியை அறிவித்த அட்லீ

sharukhan jawan new release date announced

Advertisment

அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ கடந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி வெளியானது. அதில் இந்தாண்டு ஜூன் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்தது. அதன் பிறகு சமீபத்தில் இப்படம் தள்ளிப் போவதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இப்படம் தள்ளிப் போவது உறுதியாகியுள்ளது. ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்துள்ளது படக்குழு. அதன்படி ஜூன் 2ஆம் தேதியில் இருந்து தள்ளி வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகிறது. இதனை அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, இது தொடர்பான ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Advertisment

atlee sharukh khan
இதையும் படியுங்கள்
Subscribe