ADVERTISEMENT

விஜய்யுடன் ஷாருக்? மாலை வெளியாகும் புதிய அப்டேட்...

10:12 AM Jul 08, 2019 | santhoshkumar

மூன்றாவது முறையாக அட்லியும் விஜய்யும் இணைந்து பணி புரியும் படம் பிகில். இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதில் நயன்தாரா, யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தொடர்ந்து விஜய் படத்தில் மூன்றாவது முறையாக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில், இன்று மாலை ஆறு மணிக்கு பிகில் படத்திலிருந்து ஒரு முக்கியமான அப்டேட் விடப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா அறிவித்துள்ளார். மேலும் அந்த அப்டேடானது படத்தின் டீஸர் பற்றியோ, ட்ரைலர், ஆடியோ வெளியிடும் தேதி பற்றியோ இல்லை. அனைவரும் எதிர்பார்த்த வேறு ஒரு முக்கியமான அறிவிப்பை அறிவிக்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் ஷாருக் கான் நடிக்கிறார் என்கிற ஒரு தகவல் பரவி வருகிறது. இதுவரை படக்குழு எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இதுகுறித்து வெளியிடவில்லை. ஒருவேளை படத்தில் ஷாருக் கான் இருக்கிறாரா இல்லையா என்கிற அப்டேட்டைதான் வெளியிடுவார்கள் என்று ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துவருகின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT