கரோனாதொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற மே17ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த வார தொடக்கத்திலிருந்து ஊரடங்கு உத்தரவில்தளர்வுகளை அளித்து வருகிறது.
இந்நிலையில் இந்த கடுமையான சூழலில், மும்பை மக்களின் நலனுக்காக அயராது உழைக்கும் மும்பை காவல்துறை மற்றும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ஷாரூக்கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், ''மஹாராஷ்டிர காவல்துறைக்கு நான் உறுதுணையாக இருப்பேன். இந்தக் கடினமான சூழலில் அயராது பாடுபடும் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மற்றும் மும்பை காவல்துறைக்கு நன்றிகளைதெரிவித்துக் கொள்கிறேன்.
வைரஸுக்கு எதிராக முன்வரிசையில் போராடி வரும் மருத்துவர்கள், தூய்மைபணியாளர்கள், மருத்துவபணியாளர்கள் ஆகியோருக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.