surya

Advertisment

விக்ரம் வேதாவில் நடித்ததை அடுத்து மாதவன் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கையை படமா எடுக்கிறார். இந்த படத்தில் கதாநாயகன் மற்றும் இயக்குனர் என்று இரு வேலைகளில் பிஸியாக இருக்கிறார் மாதவன். ராகெட்ரி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்படுகிறது.

தற்போது இந்த படங்களில் நடிகர் சூர்யா மற்றும் ஷாரூக் கான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் நடிகர் சூர்யாவும், ஹிந்தியில் ஷாரூக் கானும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.