Advertisment

பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்ட ஷாரூக் வீடு- பரவிய வந்தந்திகள்!

sharuk khan

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மும்பை மாநகரில் கரோனா பாதிப்பு பலரையும் பாதித்துள்ளது. பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினரும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் நடிகர் ஷாரூக்கான் தனது வீட்டை ராட்சத பிளாஸ்டிக் கவர்களைக் கொண்டுவெளிப்புறங்களை மூடியிருக்கிறார். இந்தப்புகைப்படம்சமூக வலைத்தளத்தில்வைரலானது. இதன்பின் பலரும் இதற்குக் காரணம், கரோனா அச்சுறுத்தல்தான், காற்றில் கரோனா பரவுவதால்தான் ஷாரூக் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்திருக்கிறார் என்று வதந்திகளைப் பரப்ப தொடங்கிவிட்டனர்.

Advertisment

ஆனால், வீட்டை அப்படி கவர் மூலம் மூடியதற்குக் காரணம் மும்பையில் தொடங்கும் பருவமழையின் சமயத்தில் வீட்டின் புறப்பகுதியில் எந்தவித டேமேஜும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக வருடா வருடம் ஷாரூக்கான் வீட்டில் கவரை கொண்டு மூடுவார்கள் என்று தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஷாரூக்கான் தரப்பில் வெளியிடப்படவில்லை.

sharukh khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe