Advertisment

மீண்டு வந்த ஷாருக்கான்

sharuk khan health update

Advertisment

உலகளவில் ரசிகர்களை வைத்திருக்கும் ஷாருக்கான், கடைசியாக டங்கி படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சுஜாய் கோஷ் இயக்கத்தில் கிங் என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஷாருக்கானே தயாரிக்க படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷாருக்கான் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அவர் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஷாருக்கான் நலமாக இருப்பதாக அவரது மேலாளர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து ஷாருக்கான் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அஹமதாபாத் விமான நிலையத்தில் தனி விமானம் மூலம் மும்பை செல்கிறார்.

sharukh khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe