அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் பிகில். நயன்தாரா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்க, மெர்சல் படத்தில் ஒளிப்பதிவு செய்த விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பாளர் அர்ச்சனா இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

Advertisment

sharuk khan

மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் நாளை முதல் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

இந்நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி வந்தன. தற்போது விஜய்யும் ஷாருக்கானும் ஒரு பாடலில் இணைந்து நடனமாடவிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தது. இதுபோன்று வெளியான தகவல்கள் வதந்தி என்று நெறுங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.