கரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற பல திரை பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர். அண்மையில் சல்மான் கான் திரைத்துறையில் பணிபுரியும் 25,000 ஊழியர்களுக்கு நிதியுதவி செய்தார்.அவரை தொடர்ந்து பாலிவுட்டின் கிங் கான் என்று அழைக்கப்படுகிற ஷாருக் கான், பல நிவாரண உதவிகளை மேற்கொள்ள இருக்கிறார்.

Advertisment

srk gauri

ஷாருக் கான் முதல் கட்டமாக மும்பை, நியூ டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட மூன்று பெரிய நகரங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும், என்னென்ன மாதிரியான நிவாரண உதவிகளை செய்ய இருக்கிறது அவருடைய நிறுவனங்களை என்பதையும் விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஏழுவிதமான நிவாரண பணிகளின் மூலம் பலருக்கும் உதவி மேற்கொள்ள இருக்கிறது ஷாருக்கானின் நிறுவனங்கள்.

இந்நிலையில் இந்த அறிக்கையில் இடம்பெறாத மற்றொரு விஷயத்தையும் ஷாருக்கான் செய்து வருகிறார்.அவருக்கும் அவருடைய மனைவிக்கும் சொந்தமான நான்கு மாடி அலுவலகத்தைக் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப் படுத்திக்கொள்ளும் 'குவாரண்டைன்' இடமாக மாற்றியுள்ளார்.

Advertisment

இந்த விஷயமானது தற்போது வெளியே கசிந்துள்ளது. எந்தவித விளம்பரமுமின்றி ஷாருக்கான் செய்யும் இவ்வளவு பெரிய உதவியைப் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ட்விட்டரில் #SRKOfficeForQuarantine என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.