Advertisment

தாயை இழந்த குழந்தை... உதவும் ஷாருக்கான்!

srk

Advertisment

கரோனாதொற்றுகாரணமாககடந்த இரண்டு மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் புலம்பெயர்ந்த பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். தென்னிந்திய மாநிலங்களில் இருக்கும்பணியாளர்கள் நடந்தேதங்களின் சொந்த ஊர்களுக்குச்செல்லும்கொடுமை நிகழ்ந்தது.

இதனிடையே ரயிலில் தனது குழந்தையைஅழைத்துக்கொண்டுசொந்தஊர் திரும்பியதாய், பசியினால்மரணமடைந்தார். தாய் இறந்தது கூட அறியாதகுழந்தை தாயை எழுப்பி விளையாடுவான். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்தக் குழந்தைக்கு உதவ வேண்டும் என்று ஷாருக்கான்சமூக வலைத்தளத்தில் தெரிவித்த நிலையில் சிறுவனை கண்டுபிடித்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர் நடத்தி வரும் 'மீர்' பவுண்டேஷன் எனப்படும் தொண்டு நிறுவனத்தின் மூலம் குழந்தையைக் கண்டு அடைந்துள்ளதாகவும், குழந்தை தாத்தா பாட்டியுடன் இருப்பதாகவும், குழந்தைக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வோம் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisment

இந்தப் பதிவை ரீட்வீட்செய்த ஷாருக்,"குழந்தையைக் கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் நன்றி. பெற்றோரை இழந்த வலியைத் தாங்க இறைவன் குழந்தைக்கு வலிமை அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். இந்த வலி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். நமது அன்பும் ஆதரவும் குழந்தைக்குத் தேவை" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

sharukh khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe