Advertisment

“அவரை மிகவும் மிஸ் செய்வேன்”- ஷாரூக்கான் வருத்தம்!

sharuk

எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத், நேற்று மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 34 வயதே ஆன சுசாந்த், தனது பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி டிவி சீரியலில் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன்பின் டிவி சீரியலிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.

Advertisment

'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுசாந்த், சில வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரு சேர ருசித்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. இவரின் மறைவிற்குத் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இந்திய விளையாட்டு வீரர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாரூக்கான் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "அவர் என்னை மிகவும் நேசித்தார். நான் அவரை மிகவும் மிஸ் செய்வேன். அவரது சக்தி, உற்சாகம், அவரது முழுமையான மகிழ்ச்சிமிக்க புன்னகை. அவரது ஆன்மாவை இறைவன் ஆசிர்வதிக்கட்டும். அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். இது மிகவும் சோகத்தைத் தருகிறது. மிகவும் அதிர்ச்சியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Sushant Singh Rajput sharukh khan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe