style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
'அட்டு' பட இயக்குநர் ரத்தின்லிங்காவின் அடுத்த படமாக 'உக்ரம்' என்கிற படம் உருவாக உள்ளது. இப்படத்தின் நாயகனாகப் 'பிக்பாஸ்' புகழ் ஷாரிக் நடிக்கிறார். நாயகியாக மிஸ் குளோபல் பட்டம் பெற்ற மாடல் அழகி அர்ச்சனா ரவி நடிக்கிறார். வில்லனாக மலேசிய சிவா அறிமுகமாகிறார். சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. படத்துக்கு ஒளிப்பதிவு துரை கே.சி.வெங்கட், இசை - பூ பூ சசி , கலை இயக்கம் - சுரேஷ் கேலரி , படத்தொகுப்பு - ப்ரவீன் செய்கிறார்கள். ரத்தின் லிங்கா, ராஜேஷ், ரவிகாந்த் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.