Advertisment

பாலியல் புகார்; பிரபல நடிகர் மீது வழக்குப் பதிவு

Sharad Kapoor involved in women misbehaviour case

இந்தி மற்றும் பெங்காலியில் கவனம் செலுத்தி வருபவர் நடிகர் ஷரத் ​​கபூர். இந்தியில் ஷாருக்கானுடன் ஜோஷ், அஜய் தேவ்கனுடன் ‘எல்.ஓ.சி. கார்கில்’, ஹிருத்திக் ரோஷனுடன் லக்‌ஷயா ஆகிய படங்களில் இவர் நடித்துள்ள நிலையில் அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வர்வேற்பை பெற்றது.

Advertisment

இந்த நிலையில் இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. 32 வயதுடைய பெண் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், “முதலில் ஷரத் கபூருடன் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டேன். பின்னர் வீடியோ கால் மூலமாகவும் பேசினேன். ஒரு நாள் சினிமா வாய்ப்பு குறித்து பேச வேண்டும் என என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார். அங்கு சென்றவுடன் என்னை பெட்ரூமுக்கு அழைத்த அவர், என்னிடம் தவறாக நடக்க முயன்றார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இந்த புகாரின் அடிப்படையில் மும்பையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் ஷரத் ​​கபூர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

actor Bollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe