Advertisment

இசை ஆல்பத்தில் களமிறங்கிய சாந்தனு... கவனம் ஈர்க்கும் குண்டுமல்லி பாடல்

Shanthnu starring gundumalli music video goes viral

Advertisment

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் சாந்தனு அறிமுக இயக்குநர் ஸ்ரீஜர்இயக்கத்தில் 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் நடித்திருந்தார். ரொமான்டிக் கமர்சியல்படமாக வெளியான இப்படம் கலவையானவிமர்சனங்களையே பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் குண்டுமல்லி என்ற இசை ஆல்பத்தில்நடித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.

திருமண நிச்சயதார்த்தம்பின்னணியில் காதல் மற்றும் குடும்பத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 'குண்டுமல்லி' பாடல் நேற்று(27.12.2021) தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இப்பாடலுக்கு விவேக் ரவி வரிகள் எழுத,ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைத்து நித்யஸ்ரீயுடன்இணைந்து பாடியுள்ளார். ஜெரார்ட் ஃபெலிக்ஸ் திமுகவின் பிரச்சாரத்தில் அதிக கவனம் ஈர்த்த "ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தர போறாரு" பாடலுக்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.கே.பி.ஆர் புரொடக்ஷன் தயாரிப்பில் வெளியாகியுள்ள குண்டுமல்லி பாடல் யூடியூப் தளத்தில் 32 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

mahimanambiar shanthanu
இதையும் படியுங்கள்
Subscribe