Advertisment

வாரிசு நடிகரின் மனைவி கரோனாவால் மரணம்!

nfdnsdfhndsf

Advertisment

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் நடிகர் ஹம்சவர்தனின் மனைவி சாந்தி ஹம்சவர்தன்,கடந்த மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து அவருக்கு சில நாட்கள் கழித்து கரோனா நெகட்டிவ் என வந்தது. இருந்தும் அவருக்குத் தொடர்ந்து மூச்சுவிடுவதில் சிரமம் இருந்துகொண்டே இருந்தது. இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சாந்தி நேற்று (21.06.2021) மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 42. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். சாந்தியின்உடல் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று மதியம் 2.30 மணியளவில் பெசன்ட்நகர் மின் மயானத்தில் சாந்தியின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

Hamsavardhan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe