“இங்க நான் ஒன்னும் பஞ்சாயத்து பண்ண வரல”- ஷாந்தனு ட்வீட்...

கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,50,000 தாண்டியுள்ளது. மேலும் உலகளவில் 22,26,941 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5,63,670 பேர் குணமடைந்துள்ளனர்.

shanthau

இவ்வாறு உலகமே காரோனா பீதியில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கையில் அஜித், விஜய் ரசிகர்கள் மீண்டும் ட்விட்டரில் சண்டையை தொடங்கிவிட்டனர். நேற்று அஜித் ரசிகர்கள், விஜய் குறித்து தவறாக ஹேஸ்டேக் போட, விஜய் ரசிகர்கள், அஜித் குறித்து தவறாக ஹேஸ்டேக் பதிவிடஎன்று இந்தியளவில் போட்டி போட்டுக்கொண்டு ஹேஷ்டேக்கைட்ரெண்ட் செய்தனர்.

 nakkheeran app

உலகமே ஒரு பிரச்சனையில் இருக்கும்போது, இவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்கிறது என்று அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் ஷாந்தனு இந்த பிரச்சனை குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “இங்க நான் ஒன்னும் பஞ்சாயத்து பண்ண வரல, அது என் வேலையும் இல்லை, யாரும் யாரையும் விட்டு கொடுக்க வேண்டாம், ஆனா, தளபதி ரசிகர்கள் தவறாக பதிவிட்டால், தல ரசிகர்கள் அதை கண்டுக்கொள்ளாமல் இக்னோர் செய்யுங்கள், அதே போல தல ரசிகர்கள் செய்தால், தளபதி ரசிகர்கள் கண்டுக்கொள்ளாமல் இக்னோர் செய்யுங்கள். நீங்கள் அதற்கு ரிப்ளை செய்வதால்தான் அது பெரியதாக வளர்ந்துவிடுகிறது'' என்று அட்வைஸ் செய்துள்ளார்.

shanthanu
இதையும் படியுங்கள்
Subscribe