shanthanu

கரோனாவின் தாக்கத்தால் தேசிய ஊரடங்கு அமலில் இருப்பதால்வீட்டிலிருந்தவாறு 'கொஞ்சம் கரோனா கொஞ்சம் காதல்' என்ற குறும்படத்தை எழுதி, இயக்கி வெளியிட்டுள்ளார் சாந்தனு.

Advertisment

இதில் அவரும், அவரது மனைவி கீர்த்தியும்இணைந்துநடித்துள்ளனர். முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisment

இந்தக் குறும்படத்தைப் பார்த்த பலருக்கும், ஒளிப்பதிவாளர் இடத்தில் யுவஸ்ரீ என்ற பெண்ணின் பெயர் இருந்தது. யார் இவர் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, யார் அந்த ஒளிப்பதிவாளர் யுவஸ்ரீ என்பதைத் தனதுட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஷாந்தனு. அதில்,"யார் அந்தக் கேமரா பெண்மணி என்று வியக்கும் அனைவருக்கும்... அவர்தான் யுவஸ்ரீ. எங்கள் வீட்டில் இருக்கும் பணிப்பெண். எல்லா இடத்திலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் இவ்வுலகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நாம் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். அவருக்கு லைக்குகளை வழங்கி, அவர் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.