கடந்த 2013ஆம் ஆண்டு கதிர், ஓவியா நடிப்பில் வெளியாக மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாறன். இவர் பாலு மகேந்திரா மற்றும் வெற்றிமாறன் உள்ளிட்டோருக்கு துணை இயக்குனராக பணி புரிந்தவர்.

Advertisment

pariyerum perumal

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இவரின் முதல் படமான மதயானைக் கூட்டம் படத்தில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெறாமல் இருந்திருந்தார். இப்படத்தை தயாரித்தவர் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ்.

Advertisment

தற்போது இயக்குனர் விக்ரம் சுகுமாறன் ஆறு ஆண்டுகள் கழித்து தனது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்திற்கு 'இராவண கோட்டம்' என்று வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக சாந்தனு நடிக்க கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்க உள்ளார்.

மேலும் இப்படம் குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கயல் ஆனந்தி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்று புதிய தகவலை வெளியிட்டுள்ளார் சாந்தனு. பரியேறும் பெருமாள் படத்தில் நடித்ததின் மூலம் கயல் ஆனந்திக்கு நல்ல வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.