/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/298_22.jpg)
சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மெஜந்தா’. இப்படம் துடிப்பான காதல்-நகைச்சுவைத் திரைப்படமாக உருவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை‘இக்லூ’ பட இயக்குநர் பரத் மோகன் இயக்குகிறார். படவா கோபி, ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் பூஜை எளிய பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் பெரும்பகுதி சென்னையிலும் சில பகுதிகள் கோத்தகிரியிலும் படமாக்கப்படும். படம் குறித்து தயாரிப்பாளர்கள் டாக்டர் ஜே.பி. லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் கே. ராஜு கூறுகையில், “காதல், நகைச்சுவை மற்றும் விஷூவலாக நிச்சயம் ‘மெஜந்தா’ சிறப்பான படமாக இருக்கும்.
எங்கள் முதல் தயாரிப்பு முயற்சியாக ‘மெஜந்தா’ திரைப்படம் கிடைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இயக்குநர் பரத் மோகன் கதை சொன்னபோது அதை விஷூவலாக பார்க்க முடிந்தது. அழகான சினிமாட்டிக் ஃபீல்- குட் எண்டர்டெயினர் கதையாக இந்தப் படம் பார்வையாளர்களுக்கு இருக்கும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)