Advertisment

சாந்தனு பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! 

shanthanu athulya

நடிகர் சாந்தனுபாக்யராஜ், விஜயுடன் இணைந்து 'மாஸ்டர்' மற்றும் நாயகனாக 'ராவணக் கோட்டம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் 'மாஸ்டர்' படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிவடைந்து ரிலீஸுக்குத்தயாராக உள்ளது. 'ராவணக் கோட்டம்' படம் கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்ததும் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

Advertisment

இதனிடையே தயாரிப்பாளார் ரவீந்தர் சந்திரசேகரின் படத்தில் நடிக்க சாந்தனு ஒப்பந்தமானார். அந்தப் படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். மேலும் பாக்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இப்படத்தை இயக்குகிறார்.

Advertisment

இன்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'முருங்கைகாய் சிப்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

புதுமணத் தம்பதியரின் முதல் இரவில் நடைபெறும் பாரம்பரிய நிகழ்வுகளை நகைச்சுவையாக விரசமில்லாமல் திரைக்கதையாக அமைத்துள்ளார் ஸ்ரீஜர். ரவீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்ரவர்த்தி, எடிட்டராக ஜோமின் மேத்யூ, கலை இயக்குநராக நர்மதா வேணி, இசையமைப்பாளராக தரண் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

shanthanu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe