"உன் இழப்புக்கு மிகவும் வருந்துகிறேன் நண்பா" - சாந்தனு உருக்கம்!

bdbdvsd

சசிகுமார் நடித்த ‘குட்டிப்புலி’ படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் பால சரவணன், பின்னர் ‘திருடன் போலீஸ்’, ‘டார்லிங்’, ‘ஒருநாள் கூத்து’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ஈஸ்வரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில், இவரது தந்தை எஸ்.ஏ. ரங்கநாதன், கரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், நேற்று (11.06.2021) சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரது இந்த திடீர் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகிற நிலையில், நடிகர் சாந்தனுபால சரவணன் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... "தந்தையை இழப்பது தாங்க முடியாத இழப்பு. உன் இழப்புக்கு மிகவும் வருந்துகிறேன் நண்பா. உனக்கும், உன் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். மன உறுதியுடன் இருங்கள்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

shanthanu
இதையும் படியுங்கள்
Subscribe