தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் சாந்தனு அறிமுக இயக்குநர் ஸ்ரீஜர்இயக்கத்தில் 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் நடித்திருந்தார். ரொமான்டிக் கமர்சியல்படமாக வெளியான இப்படம் கலவையானவிமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் நடிகர் சாந்தனு தனது குடும்பத்தின் பெயரைதவறாக பயன்படுத்துகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "என் திரையுலக நண்பர்களுக்கு சமீபகாலமாக எங்கள் குடும்பத்தின் பெயரில் சில தவறான அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் எங்கள் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள். கவனமாக இருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து உங்களுக்கு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் எனவும்தெரிவித்துள்ளார்.