Shanthanu Bhagyaraj

‘மதயானைக் கூட்டம்’படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற விக்ரம் சுகுமாறன், தற்போது ‘ராவணக்கோட்டம்’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கிறார். கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் பணிகள் கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைப்பட்டன.

Advertisment

தற்போது ‘ராவணக்கோட்டம்’ படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ள படக்குழு, ராமநாதபுரத்தில் இறுதிகட்டப் படப்பிடிப்பை நடத்திவருகிறது. இந்த நிலையில், நடிகர் சாந்தனு பாக்யராஜ் தன்னுடைய பிறந்தநாளை ‘ராவணக்கோட்டம்’ படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடினார். அவரது தந்தையும் இயக்குநருமான பாக்யராஜ், படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து படக்குழுவினரோடு இணைந்து தன்னுடைய மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.

Advertisment

சாந்தனு பாக்யராஜ் சமீபத்தில் நடித்திருந்த ‘பாவக்கதைகள்’, ‘வானம் கொட்டட்டும்’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பும், ‘மதயானைக் கூட்டம்’ வெற்றியைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் சுகுமாறன் படம் இயக்குவதும் இப்படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.