Advertisment

"முடிவை மாற்றுவதற்கு ஒரு நொடி என்பதே அதிகம்" வி.ஜே சித்ரா விவகாரத்தில் நடிகர் ஷாந்தனு உருக்கம்!

Shanthanu

பிரபல சின்னத்திரை நடிகையான வி.ஜே சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சிக்காகப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட வி.ஜே சித்ரா, தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு, நள்ளிரவில் தான் தங்கியிருக்கும் நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலுக்குத் திரும்பியுள்ளார். அதனையடுத்து, அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது முகத்தில் நகக் கீறல் மற்றும் காயம் இருந்ததால் இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஓட்டலில் அவருடன் தங்கியிருந்த அவரது வருங்கால கணவர் ஹேம்நாத்தும் விசாரணையின் பிடியில் உள்ளார்.

Advertisment

விஜே சித்ராவின் மறைவையடுத்து திரையுலகப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ஷாந்தனு வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "மீண்டும் நாம் இதைப் பற்றி பேசுகிறோம். வாழ்க்கை மிகவும் விலை மதிப்பற்றது. அவரது வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்கு முன், யாரிடமாவது அவர் பேசியிருக்கலாம் என்று விரும்புகிறேன். உள்ளுக்குள் எவ்வளவு போராட்டங்கள் இருந்தாலும், தயவு செய்து சத்தமாகப் பேசுங்கள். அது நிச்சயம் உதவும். முடிவை மாற்றுவதற்கு ஒருநொடி என்பதே அதிகம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

shanthanu vj chithra
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe