shanmugapandian movie new update

தே.மு.தி.க முன்னாள் தலைவர் மறைந்த விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன். இவர் இளையராஜா இசையில் யு. அன்புவின் இயக்கத்தில் ‘படை தலைவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீடியோவுடன் வெளியானது. அந்த வீடியோ பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்திலிருந்து சண்முக பாண்டியனின் பிறந்தநாளான கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியாகியது.

Advertisment

அதனைத்தொடர்ந்து நீண்ட நாட்களாக படை தலைவன் படம் குறித்த அப்டேட்டுகள் வெளிவராத நிலையில், நேற்று இப்படம் குறித்த ரீலிஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என புதிய போஸ்டருடன் படக்குழு தெரிவித்தது. அதே மாதம் 5ஆம் தேதியில் விஜய்யின் ‘தி கோட்’ படமும் வெளியாகவுள்ள நிலையில், இதில் விஜயகாந்த் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் நடித்துள்ளார். இதற்காக சமீபத்தில் சண்முக பாண்டியன் வீட்டிற்கு சென்று படக்குழுவினர் நன்றி தெரிவித்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில் சண்முக பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பொன்ராம் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளார். இதில் சரத்குமாரும் நடிக்கவுள்ளார். டைரக்டர் சினிமாஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் பூஜை விஜயகாந்த்தின் நினைவிடத்தில் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்களை சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு முன்பு இப்படத்தின் இயக்குநர் பொன்ராம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.