/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/42_64.jpg)
டைரக்டர்ஸ் சினிமாஸ்தயாரிப்பில், விஜயகாந்த்தின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவினில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டுபடக்குழுவினரை வாழ்த்தினார்.
'வால்டர்' மற்றும் 'ரேக்ளா' பட இயக்குநர் யு.அன்பு கதையில், 'நட்பே துணை' இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனத்தில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, இப்படத்தில் பேசப்படவுள்ளது. கேரள காடுகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேலும் ஒரிசா, தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.
கஸ்தூரி ராஜா, எம்.எஸ். பாஸ்கர், யாமினி சந்தர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் இப்படத்தில் நடிக்க, திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படத்தின் தலைப்பை ஆடி 18 ஆம் தேதி அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)