Shankar spends crores on a single song in rc15 movie

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்குகிறார். தற்காலிகமாக 'ராம்சரண் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்திற்கான கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுத, தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தின் பாடல் குறித்ததகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி 'ராம்சரண் 15' படத்தில் இடம்பெறும்ஒரு பாடலுக்குஇயக்குநர் ஷங்கர் ரூ.23 கோடி வரை செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பாடல் குறித்தஎதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போதிலிருந்தே எழுந்துள்ளது.