/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/110_13.jpg)
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் ஷங்கர் பேசுகையில், “என்னுடைய மகளுக்கு வாய்ப்பு கொடுத்த சூர்யா, ஜோதிகா மற்றும் 2டி ப்ரொடக்ஷனுக்கு நன்றி. எனக்கு விருமன் படத்தின் கதை தெரியாது. படத்தை சூர்யா, ஜோதிகா தயாரிக்கிறார்கள் என்ற உடனே எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. தொடர்ந்து அவர்கள் நல்ல படங்களை எடுப்பதால் எந்தவித தயக்கமும் இல்லாமல் என் மகளை அறிமுகப்படுத்த சம்மதித்தேன். திரையில் பார்த்த உடனே மனதில் வந்து ஒட்டிக்கொள்ளக்கூடிய அளவிற்கு திறமையானவர் நடிகர் கார்த்தி. அவருக்கு ஜோடியாக என் மகள் நடித்ததில் எனக்கு சந்தோஷம். படத்திலுள்ள பாடல்கள் ரொம்பவும் அற்புதமாக உள்ளது. யுவனுக்கு வாழ்த்துகள்.
இயக்குநர் முத்தையாவின் படங்களை நான் பார்த்ததில்லை. ஆனால், அவர் படத்தில் பெண்கள் கதாபாத்திரத்திற்கு நல்ல முக்கியத்துவம் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் என்னுடைய மகள் இப்போது சரியான இடத்தில் இருக்கிறார். படத்தில் ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்க வேலைகள் மேலோட்டமாக இல்லாமல் ரொம்பவும் ஆழமாக உள்ளன. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)