shankar ram charan movie title update

Advertisment

இயக்குநர் ஷங்கர் கமலை வைத்து 'இந்தியன் 2' மற்றும் ராம் சரணை வைத்து 'ராம் சரண் 15' என இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார். இதில்ராம் சரண் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்துஉள்ளிட்ட நாடுகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பேசப்படுகிறது.

இந்த நிலையில், ராம் சரண் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'ராம் சரண் 15' படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துபடத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'கேம் சேஞ்சர்' எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கான டைட்டில் வீடியோவையும் படக்குழு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது.

Advertisment

கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்று முடிந்த ஆஸ்கர் விழாவில் 'நாட்டு நாட்டு' பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி விருது வாங்கினார். இதன் மூலம் உலக அரங்கில் நடிகர் ராம் சரண் கவனம் பெற்றுவிட்டதால் அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாகவுள்ள 'கேம் சேஞ்சர்' ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.