மு.க.ஸ்டாலினின் குறிப்பிட்ட இரண்டு திட்டங்களை வரவேற்ற ஷங்கர்!

ffrafa

தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதேபோல், முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குநர் ஷங்கர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... "தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். அரசாங்க உத்தரவுகளை, குறிப்பாகத் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கான சிகிச்சைக்குத் தமிழக அரசின் காப்பீடும், பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்கிற அறிவிப்பையும் நான் பாராட்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

director Shankar
இதையும் படியுங்கள்
Subscribe