2.0 படத்தை ஷங்கர் இயக்கி பின்னர் இந்தியன்2 திரைப்படம் கமல்ஹாசனை வைத்து இயக்க இருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான திரைக்கதை, வசனம் ஆகிய பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டது. பொள்ளாச்சியில் பெரிய அரங்கம் ஒன்றை அமைத்து வருகின்றது படக்குழு. இந்த மாதம் 16ஆம் தேதியில் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பாலிவுட் ஸ்டாரான ஹிரிதிக் ரோஷனை வைத்து ஷங்கர் படம் இயக்குவதாக இருந்தார். 2.0 படத்திற்காகவே ஹிரிதிக் ரோஷனின் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஆனால், அவர்கள் ஒன்று சேரமுடியாமலே போனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தியன்2 படம் முடிவடைந்தவுடன் ஹிரிதிக் ரோஷனை வைத்து ஷங்கர் சூப்பர் ஹீரோ படம் ஒன்றை இயக்க உள்ளதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.