Shankar directs a Vel paari novel to a film Suriya will be a hero

Advertisment

சூர்யா, தற்போது பாலா இயக்கும் 'வணங்கான்' படத்திலும் சிறுத்தை சிவா இயக்கும் ’சூர்யா 42’ படத்தில் நடிக்கிறார். இதில் ’சூர்யா 42’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பத்தானி நடிக்கிறார். மேலும் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சூர்யா நடிக்கும் புதிய படத்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதிய 'வேள்பாரி' நாவலை தழுவி இயக்குநர் ஷங்கர் படமெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே சூர்யா, சமீபத்தில் நடந்த விருமன் பட இசைவெளியீட்டு விழாவில், எம்.பி சு.வெங்கடேசனுடன் இணைந்து ஒரு புராஜெக்ட் தொடங்கி இருப்பதாகவும் இது குறித்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.