
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவந்த 'இந்தியன் 2' திரைப்படம், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், இயக்குநர் ஷங்கரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, ஷங்கரின் அடுத்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரண் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இது இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 50வது படமாகும். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் உருவாகவுள்ளது.
நடிகர், நடிகைகள் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படும்சூழலில், இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ரன்வீர் சிங் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சென்னை வந்து இயக்குநர் ஷங்கரைச் சந்தித்துப் பேசியுள்ளதாகவும், அப்போது ஷங்கர் அவரிடம் கதை சொன்னதாகவும், அந்த கதை ரன்வீருக்கு பிடித்துப்போக விரைவில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Follow Us