
இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குநரானஷங்கர், சிலகாலமாக பல்வேறு பட சர்ச்சைகளில் சிக்கிவரும் நிலையில், ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான 29 வயதான ரோகித் என்பவரை அவர் மணக்கவுள்ளார்.

ரோகித், டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகன் ஆவார். இவர்களது திருமணம் வரும் ஜூன் 27ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், கரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் வரவேற்பு நிகழ்ச்சியைப் பிரம்மாண்டமாக நடத்த ஷங்கர் தரப்பில் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)